Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2021 15:00:48 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் வன்னி பொதுமக்களுக்கான வீடு நிர்மானிப்பு பணிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் தேவையுடைய பொதுமக்களுக்காக வீடு நிர்மானிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (30) ஆம் திகதி மேலும் ஒரு புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கமைய இந்த வீடு வவுனியாவில் உள்ள முண்டிமுருப்பு பிரதேசத்தில் வசிக்கும் திருமதி தீபிகா சஞ்ஜீவனிக்கு இது பரிசாக வழங்கப்பட உள்ளது.

பயனாளி வவுனியாவில் உள்ள முண்டிமுருப்பு பகுதியில் தங்குமிடம் இல்லாமல் வசித்து வருவை கருத்திற் கொண்ட இராணுவம், மக்கள் வங்கியில் உள்ள புத்த சங்கத்தினரின் அனுசரனையுடன் மற்றும் இராணுவத்தின் இலவச தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிகழ்வில் 56 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 562 வது பிரிகேட்டின் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையுடன் 17 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினரால் வீடு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் 562 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பிரேமவன்ச, வவுனியா மக்கள் வங்கியின் உதவி பிராந்திய முகாமையாளர், 17வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர், பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி இடம் பெற்றது.