Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2022 12:39:09 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் புத்தாண்டை முன்னிட்டு ருவன்வெலி சேயவில் அன்னதானம்

புத்தாண்டை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் சனிக்கிழமை (டிசம்பர் 31) அனுராதபுரம் ருவன்வெளி மகா சேய விகாரைக்கு பால் உணவுகள் (‘கிரி அஹர பூஜை’) பூஜையை வழங்கினர்.

இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் பிரதீப் கமகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.

வண. மகா சங்கத்தினர் சமய சடங்குகள் மற்றும் மத வழிப்பாட்டை நடத்தினர்.

புத்தாண்டின் போது புனித ருவன்வெளி சேய வளாகத்திற்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைக் கருத்தில் கொண்டு வன்னிப் படையினர் பக்தர்களுக்காக 3000 சதுர அடியில் ஒரு பெரிய தற்காலிக குடிசையை அமைத்திருந்ததுடன் சனிக்கிழமை 28 டிசம்பர்).முழுவதும் 5000 கோப்பை மூலிகை பானங்களையும் வழங்கினர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத மருத்துவ பீடத்தின் வைத்தியர் இந்திரஜித் சோமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்ட மூலிகை பானம், அன்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும், விரதம் அனுஷ்டித்தவர்களுக்கும் வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் (வடமத்திய) தளபதி மேஜர் ஜெனரல் எம்.பி வீரசிங்க முழு திட்டத்திற்கான ஆதரவினை வழங்கினார்.