Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2019 19:28:31 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் பரணகம வித்தியாலயத்திட்கு புதிய கனிணிகள் நன்கொடை

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட நன் கொடை வழங்கும் திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிஓயா பரணகம வித்தியாலயத்தில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய கனிணிகள் நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந் நன்கொடைகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் ஆலோசனைக்கமைய கொமர்ஷல் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் திரு. யாசரத் முனசிங்க அவர்களால் புதிய 6 கனிணிகள் நன்கொடைகள் வழங்கப்பட்டது.

வன்னி பாடசாலைகளின் கல்வித் தரங்களை உயர்த்துவதன் நிமித்தம் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் கடந்த வருடங்களில் வன்னி பாடசாலைகளில் 25,000 க்கும் அதிகமான மாணவர்களின் நலனுக்காக ஏற்கனவே பல திட்டங்களை ஆரம்பித்துள்ளார்.

இந்த நனகொடை வழங்கும் நிகழ்வானது கடந்த (13) ஆம் திகதி புதன் கிமை பரணகம வித்தியாலயத்தில் இடம் பெற்றதுடன், இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி சார்பில் 621 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேணல் சாந்த ரணவீர, மாகாண கல்வி திணைக்களத்தின் கல்வி உதவி பணிப்பாளர் திருமதி சுதர்சினி கபுகொட்டுவ மற்றும் வெலிஓயா வலய கல்வி பணிப்பாளர் திரு என்.டபில்யூ ராமநாயக ஆகியோறும் கலந்து கொண்டனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் 62 பிரிவு மற்றும் 621 படைப்பிரிவினரும் இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். Running sport media | Men’s shoes