Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2020 22:54:21 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் நலன்புரித் திட்டங்கள் முன்னெடுப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையில் பதவி மாதுவ போகஸ்வௌ மற்றும் மஹாகச்சிகுடிய போன்ற பிரதேசங்களில் வறுமைக் கோட்டின் கீழ் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்கள் மற்றும் சம்பத்நுவர பிரதேசத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் தெரிவு செய்யப்பட்ட 50ற்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களிற்கான நலன்புரி திட்டங்கள் இப் படைத் தலைமையகத்தில் ஞாயிற்றுக் கிழமை (12) பௌத்த தேரர்களின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் கலந்து கொண்டதோடு 30 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபரணப் பொதிகளை கேகால்லை அலுலேன விகாரையின் விகாராதிபதியான அத்தநாகொட சோமவன்ச தேரர் அவர்கள் வழங்கினார். அதற்கமை வெலிஓய சம்பத்நுவர வித்தியாலயத்தில் காணப்படும் 50ற்;கும் மேற்பட்ட தேவையுள்ள குடும்பங்களிற்கான உலர் உணவுப் பொதிகள் அன்றய தினம் (12) இவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் கேகால்லை அலுலேன விகாரையின் விகாராதிபதியான அத்தநாகொட சோமவன்ச தேரர் மற்றும் சூரிய தருவோ எனும் நிறுவனம் போன்றன எதிர்காலத்தில் நன்கொடைகளை வழங்க தீர்மானித்துள்ளன.

இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜி ஏ எல் கித்சிறி உயர் அதிகாரிகள் அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் மற்றும் தேவை நாடும் குடும்ப உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர் Adidas footwear | balerínky