Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் வெஹெரதெனா கிராமத்திற்கு உதவிகள்

வீரதனன்னில் உள்ள ரொஷான் மஹாநாமா முதன்மை பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அறைபள்ளி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு முன்னிலையில் 2017 ஆகஸ்ட் 20ம் திகதி வழங்கப்பட்டது. வடக்கில் ஸ்ரீ வஜிரா ராமய விகாரை ஸ்ரீ விஜயராமசாசன சேவா சங்கசங்கத்தின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் திருக்கோணமலை ஆனந்த தேரர் இந்த பணிகளுக்கான முழுமையான நிதியுதவிகளை வழங்கினார்.

இந்த மதிப்புமிக்க நன்கொடை திரு.லக்ஷ்மன் மஹாநாமா பாம்பலப்பிட்டி. ஸ்ரீ வஜிரா ராமய விகாரையின் செயலாளரின் ஒருங்கினைப்புடன் இடம் பெற்றது.

இந்த ஆரம்ப பள்ளி மற்றும் அதேவளாகத்தில் அமைந்துள்ள முந்தைய பள்ளி முன்னாள் கிரிக்கெட் வீரர் திரு. ரொஷான் மஹாநாமா தனது சொந்த நிதி மூலம் அன்பளிப்பை வழங்கினார்.

எல்.சி.கனடிய எய்ட்பி நிறுவனத்திடமிருந்து கிடைத்த நிதியுதவியுடன் ராஜித பெர்னாண்டோவின் மேற்பார்வையில் குழாய் கிணறு அமைக்கப்பட்டது.

இந்த பணிகளை பௌத்ததேரர், தொண்டு நிறுவனங்கள் இனைந்து 62ஆவது படைப்பிரிவிற்கு கீழ் இயங்கும் 623ஆவது படைத்தலைமையகத்திற்குரிய 26ஆவது சிங்க படையணியின் ஒத்துழைப்புடன் இடம் பெற்றது.

திரு ஹென்றி கணேகொடவினால் உலர் உணவுப் பொருட்கள் போகாஸ்வாவ மற்றும் வேரரதென்ன கிராமங்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடுகள் ரூ: 900,000.00 செலவில் கெழும் சுஜித் அவர்களின் நன்கொடையில் நிர்மானிக்கப்பட்டது. இந்த கட்டிடபணிகள் 563 படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 19ஆவது கஜபாபடையணியினால் நிர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற் மூத்த கிரிக்கெட் வீரர் திரு ரொஷான் மஹானாம, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, 62, 563 மற்றும் 623 படைப்பிரிவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது.

latest jordans | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!