04th April 2025 22:09:53 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் 2025 ஏப்ரல் 03ம் திகதி வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆபத்தான போதைப்பொருள் தடுப்பு குறித்த விரிவுரையை நடாத்தப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் என்.எம். லக்ஷ்மன் எதிரிமண்ண இந்த விரிவுரையை நடத்தியதுடன் மேலும் இலங்கையில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் உள்ள சவால்கள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இவ் விரிவுரையில் 38 அதிகாரிகள் மற்றும் 480 சிப்பாய்கள் பங்குபற்றினர்.