Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2025 11:44:00 Hours

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 4 வது மற்றும் 5 வது தேசிய பாதுகாவலர் படையணிகளுக்கு விஜயம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 07 ஜனவரி 2025 அன்று 4 வது தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 5 வது தேசிய பாதுகாவலர் படையணிக்கு முறையான விஜயம் மேற்கொண்டார்.

வருகையில் அவரின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு இடத்திலும் கட்டளை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். விஜயத்தின் நினைவாக மரகன்றுகளையும் நாட்டினார். அதன் பின்னர் படையணிகளின் பொறுப்புகள் மற்றும் தற்போதைய அர்ப்பணிப்பு தொடர்பான விரிவான விளக்கங்களை பொற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார். இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.