Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2023 22:42:00 Hours

வன்னி பாததுகாப்பு படையினரால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு புனித நகரம் சுத்தம்

டெங்கு தொற்றுநோய் பாரியளவில் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர், மே 2 முதல் 4 வரை மூன்று நாட்களுக்கு அனுராதபுரம் மகா மேகவன உயன புனிதப் பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நலத் திட்டமானது எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நகருக்கு வருகை தருவதையிட்டு வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 900 இற்கும் மேற்பட்ட வன்னிப் படையினர் இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்தனர்.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்டபிள்யூடிஎன் மெதிவக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், வன்னி படையினர் மாசுகளை அகற்றி மூன்று நாட்கள் பணியை மேற்கொண்டனர்.

212 வது காலாட் பிரிகேடின் அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் சிப்பாய்களுடன் இணைந்து திட்டத்திற்கு தீவிரமாக பங்களித்தனர்.