Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 12:58:25 Hours

வன்னி படையினரின் உதவியுடன் புதிய வீடொன்று நிர்மானித்து கையளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் போஹொடவெவ தந்திரிமலை பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவருக்கு இராணுவத்தினரது உதவியுடன் கடந்த நவம்பர் மாதம் (28) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட நன்கொடையாளியான திரு லெஷ்லி சமன் மாரசிங்க அவர்களது நிதி அனுசரனையுடன் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன ஏற்பாட்டுடன் இந்த புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு பயனாளியான திரு பி. தர்மசேன அவருக்கு கையளிக்கப்பட்டன. இச்சந்தப்பர்ப்பத்தில் நன்கொடையாளியின் குடும்ப அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர்.

இந்த பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 212 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன கண்காணிப்பின் கீழ் 5 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இந்த விடுகள் நிர்மானிக்கப்பட்டன.

வீடு கையளிப்பு நிகழ்வின் போது 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன, நன்கொடையாளி திரு லெஷ்லி சமன் மாரசிங்க மற்றும் அவரது குடும்பத்தார், 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பிரிஸ், சிவில் தொடர்பாடல் அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். best shoes | Nike Shoes