Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2020 18:27:15 Hours

வன்னி படையினரால் 1500ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான நன்கொடை நிகழ்வு முன்னெடுப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் வன்னியில் உள்ள வெலிஓய மற்றும் சம்பத்வௌ போன்ற பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளில் கல்வி பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1420 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கும் பாரிய திட்டமானது சனிக் கிழமை (11); சம்பத்நுவர தேசிய பாடசாலையில் வழங்க்கப்பட்டது.

இப் பாரிய திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் ஆசிகளுடன் 62ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களின்; தலைமையில் 621ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அஜித் விக்ரமசேகர போன்றோரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கான நன்கொடையை லங்க பெஸ்டல் லிமிடட் மற்றும் அட்லஸ் நிறுவனம் அத்துடன் மல்வத்த பீடத்தின் மதிப்பிற்குறிய தேரர் திப்பொடுவௌ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள மகா நாயக்க தேரர் போன்றோர் வழங்கியிருந்ததோடு இந் நன்கொடையின் மூலம் பாடசாலை பைகள் கொப்பிகள் தண்ணீர் போத்தல்கள் போன்ற பரிசுப் பொதிகள் கிராம சேவகரவர்களின் விபரக் கோவைக்கமைவாக இவை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 62ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டதோடு 1420 மாணவர்களுக்கான பரிசுப் பொதிகளும் இப் படைத் தளபதியவர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதற்கமைவாக வெஹெரதென்ன ரொஷான் மஹானாம முன்பள்ளி மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் போன்றன கிரி;க்கெற் வீரர் திரு ரொஷான் மஹனாம திரைப்பட தயாரிப்பாளர் திருமதி ரேனுகா பாலசூரிய போன்றோரின்; தலைமையிலான நன்கொடையின் மூலம் சனிக் கிழமை (11) இப் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்ட்டன. இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் விஜேராம நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியான வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் கலந்து கொண்டதோடு ரொஷான் மஹானாம முன்பள்ளியின் 150 மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் 62ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் 621ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் போது ஆசிரியர்கள் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். buy footwear | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth