Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2021 18:36:10 Hours

வன்னி படைப்பிரிவுகளுக்கிடையிலான கூடைப்பந்து சாம்பியன்ஷின் போட்டிகளின் இறுதிச் சுற்று

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிவுகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2021 இன் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 14, 15 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இந்நிகழ்வகளின் சிறப்பு விருந்தினராக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவர்கள் கலந்துகொண்டார்.

மேற்படி நிகழ்வில், 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களும் கலந்துகொண்டிருந்ததோடு, இந்நிகழ்வின் சாம்பியன்ஷிப்பை 54 வது படைப்பிரிவினர் வெற்றிகொண்டதோடு, 21 வது படைப்பிரிவு சிப்பாய்கள் அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். போட்டியின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான பதக்கத்தை பீரங்கிச் சிப்பாய் எச்.ஏ.எஸ் டில்ஷானும், சாம்பியன்ஷிப் போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கான விருதை சார்ஜண்ட் ஏ.எம்.பி.கே அத்தநாயக்கவும் வென்றனர்.

இறுதிப் போட்டியி்ன் நிறைவில், பிரதம அதிதி படைப்பிரிவு தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேற்படி நிகழ்வுகள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.