18th December 2021 06:15:44 Hours
சீன தூதுவர் அதிமேதகு கீசென் ஹொங் அவர்களின் வடக்கிற்கான விஜயத்தின் போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களை புதன்கிழமை (15) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி சீனத் தூதுவரை வரவேற்று, வன்னியின் பாதுகாப்பு , அபிவிருத்திப் செயற்பாடுகள் மற்றும் சமூக நலத் திட்டங்களில் இராணுவத்தின் வகிபங்கு மற்றும் சிவில் சமூகத்திற்கான உதவிகள் தொடர்பில் எடுத்துரைத்தார். சந்திப்பின் நிறைவில் இருவரும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாற்றிக் கொண்டனர்.