Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2019 08:37:50 Hours

வனாத்தவில்லுவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படையிரால் மீட்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே மற்றும் 143 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக்க திசானாயக ஆகியோர்களின் வழிக்காட்டுதலின் கீழ் 143 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 16 ஆவது கஜபா படையணியினரால் வனாத்தவில்லுவ பிரதேச செயலக பிரிவின் மனதிவு பகுதியில் வெள்ளத்தால் சிக்கி தவித்த மக்கள் (20) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

இந்த பிரதேசங்களில் வெள்ளம் பெருக்கெடுப்பின் நிமித்தம் பாதிக்கப்பட்ட 50 க்கும் அதிகமான பொதுமக்களை படையினர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உடனடியாக உதவினார்கள். மீட்கப்பட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலக பிரவினர் மற்றும் வெள்ள நிவாரண மையத்தின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, அருகிலுள்ள சமுக நிலையங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர்.

இந்த பணிகள் 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ படகுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மீட்கப்பட்டனர்.Nike footwear | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov