Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2021 07:35:00 Hours

வட மத்திய மாகாணத்தில் வீட்டற்றவர்களுக்கு இராணுவத்தினரால் இரு வீடுகள் அன்பளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கவச வாகன பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் 21 வது படைப்பிரிவின் 212 வது பிரிகேட் படையினரால் இராணுத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 11 ஒக்டோபர் 2021 அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது இரண்டு புதிய வீடுககளின் சாவிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட் இத் திட்டத்திற்கு திரு ரசித் மானதுங்க மற்றும் வண. உடுதும்பர சோபித தேரர் ஆகிய இருவரும் நிதி உதவிகளை வழங்கியிருந்தனர்.

இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கெக்கிராவ, மொரகொல்லாகமவில் திரு டி.எம் சாந்த மற்றும் தந்திரிமலை ருவங்கமவில் திரு. ஏ.ரவீந்திர ரணசிங்க ஆகியோரின் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இவ் இரு வீடுகளும் தனித்தனியான நிகழ்வுகளின் போது அன்பளிப்புச் செய்யப்பட்டன.

21 வது படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக 212 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்பிஎஆர்பி ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படை மற்றும் 5 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாவலர் படை படையினரால் மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

கவச வாகன பிரிகேடுகளின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பீரிஸ், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டிபிஆர்ஈடபிள்யூஎம்எம்டபிள்யூஎன் மடுகல்ல அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை 7 வது (தொ) இராணுவ கவச வாகன படையின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 212 வது பிகேடின் 5 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் கட்டளை அதிகாரி , 212 வது பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி மற்றும் பயனாளிகளின் உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.