11th February 2020 17:20:49 Hours
தியதலாவையிலுள்ள இராணுவ வடிவாய் ஸ்னயிபர் பயிற்சி நிலையத்தில் புதிதாய் நிர்மானிக்கப்பட்ட தங்குமிட வதிவிடங்கள் மற்றும் நீர் சேமிப்பு கட்டிட தொகுதிகள் இம் மாதம் (7) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
இந்த கட்டிட நிர்மான பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இந்த பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதியான பிரிகேடியர் G.M.C.K.B ஏகநாயக அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் நீர் சேகரிக்கும் நிலைய கட்டிடதொகுதியில் ஒரு நாளைக்கு 160,00 எல்.டி.ஆர் திறனை கொண்டுள்ள தண்ணீரை சேகரிக்க முடியும்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து ரிபன்களை வெட்டி வைத்து இந்த கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Air Jordan