19th November 2023 21:10:04 Hours
காங்கேசன்துறை வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாரம்பரிய 'கட்டின பூஜை' நவம்பர் 5 ஆம் திகதி விகாரையின் பிரதமகுரு வண.ஜிந்தோட்ட நந்தராம தேரரின் தலைமையில் பல சமய அனுஷ்டானங்களுடன் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
இவ்வருட நிகழ்வு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதியின் வழிகாட்டலின் கீழ் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி படையினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் சமய நிகழ்வின் வெற்றிக்கு தமது அயராத ஆதரவை வழங்கினர்.
நவம்பர் 2023 ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் 'போதி பூஜை', 'தர்ம' சொற்பொழிவு மற்றும் பிரித் பாராயணம் நடத்தப்பட்டது. பௌத்த துறவிகளுக்கு 'ஹீல் தான' (காலை உணவு) மற்றும் 'அட்டபிரிகர' வழங்குதல் மற்றும் மறுநாள் காலை விகாரையின் பிரதமகுருவினால் விஷேட சொற்பொழிவு ஆகியவை சமய நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.