Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2021 14:00:12 Hours

லெபனானிலுள்ள இலங்கை படையினருக்கு பதக்கங்கள் அணிவிப்பு

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைகளுடன் இணைந்து சேவையாற்றிவரும் இலங்கை படைகளின் அர்ப்பணிப்புக்களை பாராட்டும் வகையில் 26 நவம்பர் 2021 அன்று லெபனானின் நகோராவில் அமைந்துள்ள ஐநா அமைதிகாக்கும் படைகளின் தலைமையகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

லெபனானில் சேவையாற்றும் லெப்டினன் கேணல் ஆர்.எஸ் படகல்ல தலைமையிலான இலங்கைக் குழுவின் அழைப்பின் பேரில் ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான தூதரகத்தின் தலைவரும் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஸ்டெபானோ டெல் கேல் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதுவர் திருமதி ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன, லெபனான் ஆயுதப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐநா அமைதிகாக்கும் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதியும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே மற்றும் இயந்திரவியற் காலாட் படையின் படைத் தளபதி டபிள்யூஎம்எஸ்சீஐ வனசிங்க அவர்களும் இலங்கை இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்து பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். மேற்படி அதிகாரிகளுக்கு அமைதிகாக்கும் படை முகாமிலிருக்கும் இலங்கை படைகளின் தளபதி லெப்டினன்ட் கேணல் ஆர்.எஸ் படகல்ல அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது.

லெபனானில் நடைபெற்ற பதக்கம் அணிவிப்புக்கான விழாவில் நடத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பு மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களின் திறன்கள் என்பற்றுடன் கூடியதான நிகழ்த்தப்பட்ட பொழுது போக்கு அம்சங்களுக்கான நிகழ்வுகள் பெரும் பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருந்தன.

பெருமளவானோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற மேற்படி அணிவகுப்பு நிகழ்வானது மைதான வளாகத்தில் இலங்கை மற்றும் லெபனன் நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்றப்பட்ட தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

மேலும், ஐநா அமைதிகாக்கும் பணி முகாமின் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்டெபானோ டெல் கொல் அவர்கள் வருகை தந்த இலங்கைக் குழுவை அன்புடன் வரவேற்றதுடன், பதக்க அணிவகுப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மரியாதை நிமித்தமான சந்திப்பொன்றையும் நடத்தினார்.

அதேபோல் இலங்கைப் பிரதிநிதிகள், லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி ஷானி கல்யானரத்ன கருணாரத்னவை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

பின்னர் இலங்கை படைகள் சார்பில் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைப் பிரதிநிதிகள் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் அமைந்துள்ள நீலக் கோட்டையைப் பார்வையிட்டதுடன், அண்மைய நாடுகளான இந்தியா மற்றும் நேபாளப் படைத் தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.