19th December 2023 00:06:53 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 45 பணிநிலை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு வீழ்ந்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்து மறுவாழ்வு பெறும் போர் வீர்ர்களின் நலனுக்காக எப்போதும் தனது ஆதரவை வழங்கும் லிங்க் நெசுரல் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகள் பற்றிய விரிவான விளக்கத்தை பெற்றுக் கொண்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வேண்டுகோளின் பேரில் லிங்க் நெசுரல் தனியார் நிறுவனத்தின் இயற்கை பொருட்களின் உற்பத்தி செயல்முறையை பார்ப்பதற்கான வாய்ப்பு கோரி, வியாழக்கிழமை (டிசம்பர் 14) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் குழுவிற்கு கிடைத்தது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்பீ, லிங்க் நெசுரல் தனியார் நிறுவனத்தின் திரு. நிஷாந்த பரணகம ஆகியோரினால் இத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
அதற்மைய நவீன தொழில்நுட்பத்தில் சிறப்பு கவனம் செலுத்தி செய்யப்படும் செயல்முறையை குழு உன்னிப்பாக பார்வையிட்டதுடன், அனைத்து இலங்கையர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக இயற்கை வளங்களை எவ்வாறு உற்பத்தி செய்ய முடியும் என்பதை அறிந்து கொண்டது. நிறுவனத்தினால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தின் பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் குழுவினர் புறப்படுவதற்கு முன்னர் லிங்க் நெசுரல் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. நிஷாந்த பரணகம மற்றும் லிங்க் நெசுரல் தனியார் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு. பிரதீப் பண்டார ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கியது.