11th March 2024 15:18:47 Hours
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் டி.எஸ்.ஆர் பெரேரா அவர்களின் மேற்பார்வையின் கீழ், 7 வது இராணுவ பொலிஸ் படையணியினால் 09 மார்ச் 2024 அன்று லக்ஷபான 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் பங்கேற்றதுடன், பாதாள உலகச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவூட்டப்பட்டது.