Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2021 23:16:39 Hours

ரைபிள் படையணி படையினரால் ஒரு விதவை குடும்பத்திற்கு புதிய வீடு

முதலாவது இலங்கை ரைப்பிள் படையணி படையினரின் தாராள மனப்பான்மையை விரிவுபடுத்தும் வகையில் மாத்தளை பகுதியில் ஒர் ஏழை குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து ஆகஸ்ட் மாதம் 20 ம் திகதி வழங்கி வைத்தனர்.

கணவனை இழந்த தனது மகளுடன் கஸ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்த விதவை தாய்க்கான வீட்டினை மாவட்ட செயலகத்தின் மூலப் பொருட்களுக்கான நிதியுதவியுடன் முதலாவது இலங்கை ரைப்பிள் படையணி படையினர் நிர்மாணித்தனர்.

தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகார சபை, ஜனாதிபதி செயலகம் மற்றும் மாவட்ட/பிரதேச செயலகங்களின் அரச அதிகாரிகளுடன் படையினர் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்களுக்கான பணத்தை திரட்டினர். இந்த திட்டத்தினை படையினரால் முன்மொழியப்பட்டதனை தொடர்ந்து மாத்தளை மாவட்ட செயலகம் 10 பேர்ச் நிலத்தை இதற்காக வழங்கியது.

111 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ராஜித ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு புதிய வீட்டினை அதிகாரப்பூர்வமாக பயனாளிக்கு வழங்கி வைத்தார். இதன் போது அரச அதிகாரிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்.