06th October 2021 20:00:14 Hours
ரஷ்யாவில் 2021 செப்டம்பர் 10 முதல் 17 வரையான தினங்களில் நடைபெற்ற வருடாந்த ஷெபாட் மூலோபாய பயிற்சிகளில் 17 நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை இராணுவத்தினரும் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
போர்க்கள சூழ்நிலைகளில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிப்பாய்களை பயிற்றுவிக்கும் பயிற்சிகளின் போது, ரஸ்ய படையினரால் பெலரூஸ் இராணுவ சிப்பாய்களிடமிருந்து ரஷ்யாவின் மேற்கு பகுதியை பாதுகாப்பது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பயிற்சிகளில் பங்கேற்கும் நாடுகளிடையே இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இப் பயிற்சிகளின் போது இந்தியா, கசகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆர்மீனியா, மொங்கோலியா, சேர்பியா மற்றும் ரஷ்யா ஆகிய இராணுவ வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். அதே நேரத்தில் பங்காளதேஷ், இலங்கை, மியான்மர், உஸ்பெகிஸ்தான், சீனா, பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் முப்படையினர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
14 அதிகாரிகளை கொண்ட இலங்கை இராணுவ குழுவினரை ரஷ்ய இராணுவம் இந்திய குழுவுடன் இணைந்து இறுதிக்கட்ட வான்வழி எதிர்ப்பு செயற்பாட்டு குழுவாக செயற்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி ரஷ்யாவின் நிஸ்னி நோவோகோகார்ட் பகுதிக்கு அருகிலுள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் திறந்த நிலப்பரப்பில் இடம்பெற்றது. மேற்படி பயிற்சிகளின் போது ரஷ்ய இராணுவத்தின் T 72B3M/T72 B4 யுத்த தாங்கிகள், BTR மெடிஎம் ஆரகுஷாகா (MDM Rkushka) கவச வாகனங்கள், கவச படையினரை ஏற்றிச் செல்லக்கூடிய ஏபிசி (APC) கவச வாகனங்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டதோடு, இயந்திரமயமாக்கப்பட்ட, வான்வழி, ஹெலிபோர்ன், பயங்கரவாத எதிர்ப்பு, தரைப்படைகள் மற்றும் விமானப்படையுடன் போர் கட்டமைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துதல் பயிற்சிகளும் இடம்பெற்றன.
மேற்படி சர்வதேச பயிற்சிகளில் இலங்கை சார்பில் மேஜர் ஜெனரல் ஏபீஐ பெர்னாண்டோ, பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன, கேணல் எஸ்ஏ ஹெட்டிகே, கேணல் எல்ஆர் விஜேரத்ன, கேணல் எஸ்டபிள்யூஆர் பிரசன்ன, கேணல் கேஜீசீஎம்எச் கம்லத், கேணல் ஏஎம்ஏ அபேவர்தன, கேணல் எச்டீடபிள்யூ வித்தியானந்த, கேணல் டீஎம்எப் கிச்சிலன், கேணல் என்டீபி குணதுங்க, கேணல் எம்ஆர் ரிஷாக், கேணல் ஆர்பிஎஸ் பிரசாத், லெப்டினன் கேணல் எச்கேபி கருணாதிலக்க மற்றும் லெப்டினன் கேணல் எல்என்யூ லியனாராச்சி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.