Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2021 06:00:00 Hours

ரஷ்ய கண்ணிவெடி அகற்றும் நிபுணர்கள் யாழ். விஜயம்

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக ரஷ்ய இராணுவப் படையின் பொறியியலாளர் சிப்பாய்களின் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமை (23) யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட போது யாழ். பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அழைப்பின் பேரில் விஷயம் செய்தனர்.

இந்த விஜயத்தின் போது கேணல் அலெக்சாண்டர் விக்டோரோவிச் ஸ்க்வோர்ட்சோவ், ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவப் படைகளின் தலைமைப் பொறியியல் சிப்பாய்களின் பணிப்பாளர் அதிகாரி, கேணல் ஆண்ட்ரி விளாடிமிரோவிச் ரோமன்சக், பிரிகேட் தளபதி பொன்டூன் பிரிகேட், கேணல் இகோர் இவனோவிச் டிராவல் சென்டர் இன் இன்ஜினியரிங் சென்டர் முன், கேணல் இகோர் இவானோவிச் ஆகியோரைக் கொண்ட குழு. கண்ணிவெடி அகற்றும் இடங்களை பார்வையிட்டதுடன் மேஜர் ஜெனரல் ஜகத்கொடிதுவாக்குவிடம் இது சம்பந்தமான விரிவான விளக்கத்தையும் கேட்டறிந்தனர்.

மறுநாள் (24) திகதி கண்ணிவெடி அகற்றும் இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர், விஜயம் செய்த பிரதிநிதிகள் யாழ். கோட்டை, நல்லூர் கோவில் மற்றும் அராலி முனையிலுள்ள ஜெனரல் டென்சில்கொப்பேகடுவ நினைவுச் சின்னத்தினை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் புதன்கிழமை (24) அந்த ரஷ்ய பொறியியலாளர்கள் கடுவான் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் தளத்தில் இயந்திர மற்றும் கைமுறையாக அகற்றும் முறை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை ஒரு விளக்கக்காட்சியுடன் தாங்களாகவே பார்த்தனர். பின்னர் அவர்கள் முகமாலை கண்ணிவெடி அகற்றும் இடத்திற்குச் சென்றும் பார்வையிட்டனர்.

அவர்கள் புறப்படுவதற்கு முன் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யூரி மிகைலோவிச் ஸ்டாவிட்ஸ்கி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது என்னங்களை பதிவிட்டார் மேலும் இந்த விஜயத்திற்கான நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.