11th February 2020 19:47:15 Hours
இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தினை மேற்கொண்ட ரஷ்ய இராணுவ தளபதியான ஜெனரல் ஒலோக் சல்யுகோவ் அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வருகை தந்தார். அதன்படி அவருக்கு இலங்கை இராணுவத்தினரால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டதுடன் அவரது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்து, அவரது பிரதிநிதிகள் குழுவுடன் (7) ஆம் திகதி காலை ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர்.
அதற்கமைய இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்கள் அவரை வழியனுப்ப கொழும்பு பண்டாரனாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த காலத்தில், அவர் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர் உட்பட பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனகே அவர்களுடன் அவருடைய துனைவியாரான திருமதி சிரோமி லியனகே அவர்களும் வருகை தந்து விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரஷ்யா தூதுக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
அதே நேரத்தில் பதவி நிலை பிரதாணி அவர்கள் அவர்களுக்கு ஒரு புகைப்பட ஆல்பத்தை வழங்கினார், அதில் இலங்கையில் மறக்கமுடியாத தொடர்புகள் மற்றும் நாட்டின் பிற இடங்களுக்கு அவர் விஜயத்தை மேற்கொண்ட புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
ரஷ்ய இராணுவ தளபதியான ஜெனரல் ஒலோக் சல்யுகோவ் அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற் கொண்டார் என்பது குறிபிடதக்க விடயமாகும். Sport media | Nike Shoes, Sneakers & Accessories