Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2020 18:00:43 Hours

யுத்ததில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீர்ர்களுக்கு யாழில் மரியாதை செலுத்தும் நிகழ்வு

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு யுத்ததில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீர்ர்களை நினைவு படுத்தி யாழ் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் இராணுவ படையினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2020 ஜனவரி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

இலங்கையின் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ் பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, யாழ் இந்திய உயர் ஸ்தானிகராலய தூதரகத்தின் தலைவர் திரு எஸ்.பாலசந்திரன் ஆகியோர்களால் மலர் வலையம் வைத்து அவர்களின் நினைவுக்கு தூபிக்கு மரியாதை செலுத்தினர்.

கடந்த காலங்களில் இலங்கையின் வேண்டுகோளின் பேரில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் யுத்திற்காக இந்திய அமைதி காக்கும் இராணுவ படையினர் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதி காக்கும் பணிக்காக இங்கு வந்தனர். எவ்வாறாயினும், புலிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏராளமான இந்திய இராணுவ வீரர்கள் நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும் Nike Sneakers | Nike Air Max 270