23rd June 2023 19:40:37 Hours
சர்வதேச யோகாசனம் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியான யோகாசனம் பட்டறைகள் இந்திய துணைத் தூதுவர் திரு. ஸ்ரீ ராகேஷ் நட்ராஜ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் புதன்கிழமை (ஜூன் 21) யாழ் குடாநாட்டில் நடைபெற்றது.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 512 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஜிஜேஎன் ஆரியதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, யாழ். மாவட்ட செயலாளர் ஏ சிவபால சுந்தரம், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர், பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா ஆகியோருடன் இணைந்து இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.