11th November 2024 14:07:10 Hours
யாழ். பாதுகாப்பு படை தலைமையக வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்டப்ளியூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 08 நவம்பர் 2024 அன்று 5 வது இலங்கை இராணுவ சேவை படையணிக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த தளபதியின் வாகன தொடரணி மரியாதை செலுத்தப்பட்டதுடன் 5 வது இலங்கை இராணுவ சேவை படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈஆர்எஸ் டி சில்வா அவர்களினால் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது, கட்டளை அதிகாரி படையலகின் செயற்பாடுகள் மற்றும் முக்கிய பொறுப்புகள் தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார். படையணியின் செயற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர், படையினருக்கு உரையாற்றியதுடன் குழு படம் எடுத்துகொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.