Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2019 07:38:21 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் மேற்கொள்ளப்பட்ட நத்தார் கரோல் நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் யாழ் படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நத்தார் கரோல்ஸ் நிகழ்வுகள் இம் மாதம் (14) ஆம் திகதி யாழ் புனித மரியார் கதிட்ரால் தேவாலயத்தில் இராணுவ கரோல் கீதங்களுடன் கோலாகலமாக இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55, 51 மற்றும் 52 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் இந்த நத்தால் கரோல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நத்தார் கரோல் நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக யாழ் மறை மாவட்ட ஆயர் டொக்டர் பீ ஞானப்பிரகாஷம் அவர்கள் வருகை தந்தார் இவரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் 55, 51, 52 ஆவது படைப் படைத் தளபதிகள் வரவேற்றார்கள்.

நிகழ்வின் முதல் அங்கமாக யாழ் மாவட்ட அருட் தந்தையான டொக்டர் பி.ஜே. ஜபரத்தினம் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சமாதான செய்தியைப் உரைத்து நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியினூடாக பாடசாலை மாணவர்களால் நாடகங்கள, கீதங்கள், நடனங்களை வழங்கி பார்வையாளர்களது கண்களை கவரும் வண்ணமாக விளங்கியது. நல்லூர் புனித பெனடிக் றோமன் கத்தோலிக்க கல்லூரி, நாவற்துரை புனித நிக்கோலஷ் தேவாலயம், புனித மரியாள் இளைஞர் கெதீட்ரல், சுன்னாகம் புனித அந்தோனியார் தேவாலயம், நல்லூர் ஹீமாலயா நடனக் குழுவினரது பங்களிப்புடன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கரோல் நிகழ்ச்சியில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் இந்திய தூதரகத்தின் பிரதானி, முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் யாழ் பிரதேசவாதிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Sneaker & Lifestyle News