26th January 2024 13:37:14 Hours
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி 25 ஆம் திகதி காங்கேசங்துறை திஸ்ஸ விஹாரையில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் பால் சோறு தானம் வழங்கப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் 600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த தான நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதற்கமைய யாழ். தலைமையக வளாகத்தில் இடம்பெற்ற போதி பூஜையில் படையினர் பங்கேற்றதுடன் ஸ்ரீ நாகவிஹார பிரதம தேரர் வண. மீகஹஜந்துரே ஸ்ரீவிமல தேரர் அவர்கள் தர்ம சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.