17th October 2023 22:54:59 Hours
‘உடற்பயிற்சிக்கு மனித உடலை அறிவியல் ரீதியாக மாற்றியமைத்தல்’ எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்ட தொடர்ச்சியான கல்விப் பட்டறைகள் 2023 ஒக்டோபர் 13 - 15 ஆம் திகதிகளில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய பிரிகேடியர் பொதுபணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் கேணல் பொதுபணி எஸ்.டி.கே.டபிள்யூ.எம்எம்.ஐ வெலிவிட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் சிறப்பம்சமாக, நிபுணர்கள் குழுவினர்களான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரணில் ஜயவர்தன, 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஐ.எம்.ஜி.என் ஜயதிலக, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கெப்டன் ஆர்.ஈ.டபிள்யூ.எல் தயாரத்ன, தேசிய/சர்வதேச விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சார்ஜன்ட் ஜீ.ஐகே.ஜே நிஷாந்த, தேசிய/சர்வதேச விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கோப்ரல் ஐ.யூ.டபிள்யூ திசாநாயக்க மற்றும் இராணுவ விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கோப்ரல் என். அஜந்தன் ஆகியோர்களால் வழங்கப்பட்ட தகவல் மற்றும் சரியான நேரத்தில் விரிவுரையும் வழங்கப்பட்டது.
அவர்களின் நோக்கம் உடல் தகுதி மற்றும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு பயிற்சியில் பங்கேற்பாளர்களின் புரிதலை மேம்படுத்துவதாகும்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் 68 உடற் பயிற்சி பயிற்றுனர்கள் உட்பட கணிசமான பார்வையாளர்களை இந்த பட்டறை ஈர்த்ததுடன், அனைவரும் இந்த பயிற்சியில் நிகழ்விலிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.