28th March 2019 12:17:21 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி அவர்களி;ன் எண்ணக்கருவிற்கமைய வடக்கு வாகன வேக 2019க்கான போட்டியானது யாழ் வரலாற்றில் முதல் தடவையாக யாழ் இழைஞர்கள் மற்றும் விதியோரங்களில் உள்ள பார்வையாளர்களை உற்சாகம் படுத்தும் முகமாக கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மக்களுக்காக ரேசிங் கார் மற்றும் மோட்டர் சைக்கில் போட்டி நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவ மோட்டார் சங்கம், இலங்கை மோட்டார் ரேசிங் சங்கம் மற்றும் மோட்டார் வளையாட்டு கழகங்கள் யாழ் இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து இந்த வாகன வேக போட்டியினை பிரபல்யபடுத்தும் முகமாக இப் போட்டிகளை நடத்த 22- 24 ஆம் திகதி நடாத்த ஏற்பாசெய்யப்பட்டது.
இப் போட்டியானது யாழ் மாநகர மேயர் திரு இமானுல் ஆனோல்ட் அவர்களின் முன்னிலையில் கடந்த (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பிரபலமான விளையாட்டு வீரர்கள் மற்றும் இராணுவ மற்றும் பொலிஸ் விசேட படையணி விளையாட்டு வீரர்களை உள்ளடக்கி 13 மோட்டர் கார்கள் மற்றும் 10 மோட்டர் வாகன போட்டியாளர்களின் பங்களிப்போடு இப் போட்டி நிகழ்வுகள் வெத்திலைகேணி பிரதான வீதியில் இடம் பெற்றன.
அதன் அடுத்த போட்டியானது யாழ் மக்களை கவரும் வகையில் (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம் பெற்றது. இப் போட்டி இறுதி நிகழ்விற்கு யாழ் பாதுகாப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி யாழ் மாநகர மேயர் திரு இமானுல் ஆனோல்ட் மற்றும் யாழ் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிகள் சிரேஷ்ட அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை மோட்டார் ரேஸ் சங்கத்தின் தலைவர் திரு திஸ்வான் அஹமட் மற்றும் யாழ் மோட்டார் ரேஸ் சங்கத்தின் தலைவர் திரு பரமேஸ் அவர்களுடன் மோட்டர் விளையாட்டு போட்டியாளர்கள் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் போன்றோர்களும் கலந்து கொண்டன.
இத் திட்டத்தின் கடைசி நிகழ்வாக 55 ஆவது படை பிரிவினரின் ஏற்பாட்டிற்கு அமைய இலங்கை மோட்டார் ரேஸ் சங்கத்தின் உத்தியோகத்தர்களால் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் 150 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகள் வழங்கப்பட்டன. affiliate link trace | Men Nike Footwear