Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2019 08:17:07 Hours

யாழ் பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற 2019 வரைபடம் மற்றும் கள உத்தி போட்டிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான வரைபடம் மற்றும் கள உத்தி போட்டிகள் யாழ் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இராணுவத்திலுள்ள 26 பட்டாலியன்கள் இணைந்து கொண்டதுடன் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு 12 ஆவது கெமுனு காலாட் படையணி மற்றும் 15 ஆவது கஜபா படையணி தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த இரு படையணிகளில் 12 கெமுனு காலாட் படையணியை வென்று 15 ஆவது கஜபா படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது பணிப்புரைக்கமைய 52 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போட்டியில் யாழ் குடாநாட்டில் சேவை புரியும் 26 படையணிகளில் இருந்து 10 அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர்.

இப்போட்டியானது இராணுவ வீரர்களது வரைபட வாசிப்பு மற்றும் கள உத்திகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்றன.

போட்டிகளில் சிறந்த போட்டியாளர் விருது 17 கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் இந்திக பதிரன மற்றும் முதலாவது விஜயபாகு காலாட்படையனியின் கெப்டன் வருன விதான ஆகியோர் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இரண்டாவது இடத்தை 12 ஆவது கெமுனு காலாட் படையணியினர் பெற்றுக் கொண்டனர்.

இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 55 ஆவது படைத் தளபதி,மேற்கு பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி, 52, 51 ஆவது படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Running sport media | New Releases Nike