Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2025 11:00:00 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி நாகதீப விகாரை, ஸ்ரீ நாகவிகார மற்றும் நாகபூஷணி அம்மன் கோயில் ஆகியவற்றிற்கு விஜயம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 13 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பல மதஸ்தலங்களில் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விஜயத்தில் வரலாற்று சிறப்புமிக்க நாகதீப விகாரையும் அடங்கும், அங்கு அவர் நாகதீப விகாரையின் தலைமை விகாராதிபதி வண. நவதகல பதுமகித்திஸ்ஸ தேரரிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றார். இந்த விஜயத்தின் போது, அவர் கோயிலின் மாதாந்த தான நிகழ்விலும் பங்கேற்றதுடன் புனித இடத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

பின்னர், நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோயிலில் (இந்து கோயில்) ஆசிர்வாதங்களைப் பெற்றார். கோயிலின் அறங்காவலர் சபையினரையும் சந்தித்த்தர். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீ நாகவிகாரையிலும் யாழ் தளபதி வழிபாடுகளில் ஈடுபட்டார். அங்கு ஸ்ரீ நாகவிகாரையின் தலைமை விகாராதிபதி வண. மீகஹஜந்துர சிறிவிமல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.