12th March 2025 16:15:53 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் 2025 பெப்ரவரி 17 முதல் மார்ச் 6, வரை விரைவு எதிர்வினை புத்தாக்கப் பயிற்சிப் பாடநெறி வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இப் பயிற்சி ஆனது மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வீரர்களின் பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை மேம்படுத்துவதாகும்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முப்பத்தாறு வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.