Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2022 10:36:36 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் புலோலியில் வறிய குடும்பமொன்றுக்கு மேலும் ஒரு புதிய வீடு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேலும் ஒரு சமூக நலன்புரி திட்டமாக யாழ் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால், புலோலி மேற்கில் வசிக்கும் ஒரு வறிய குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான அனுசரணையானது ஒரு பெண் நன்கொடையாளரினால் வழங்கப்பட்டது.

குடாநாட்டில் வீடற்றவர்களுக்காக இராணுவம் மேற்கொண்டுவரும் வீடு நிர்மாணிக்கும் திட்டத்திற்கு ஏற்ப, புலோலியைச் சேர்ந்த திருமதி ஜெயரூபன் நந்தனியின் வறிய குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான முதல் அடிக்கல்லை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் புதன்கிழமை (24) நாட்டி வைத்தார்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத்தின் திறமைகள் மற்றும் நிதி நிர்வாகத்தில் நம்பிக்கைகொண்ட பெண் அனுசரணையாளரான திருமதி ஷீலா இம்மானுவேல், வெளிநாட்டை வசிப்பிடமாக கொண்ட மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் மனிதாபிமான அடிப்படையில் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தார்.

மேற்கு, புலோலியைச் சேர்ந்த திருமதி ஜெயரூபன் நந்தனியின் குடும்பத்திற்கு வீடு இல்லாத காரணத்தினால், புலோலி பகுதியில் சேவையாற்றும் படையினரால் இந்த வீட்டுக்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.

551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்கிரமசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை 551 வது பிரிகேட் படையினர் வழங்கினர். அடிக்கல் நாட்டும் நிகழ்வின் இறுதியில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் தகுதியான குடும்பத்திற்கு உலர் உணவுப் பொதிகளை பரிசாக வழங்கினார்.

55 வது படைப்பிரிவின் தளபதி, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி, 551, 552 மற்றும் 553 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் ஆரம்ப நிகழ்வின் போது பங்குபற்றினர்.