Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2025 06:05:03 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் தொற்றா நோய்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு குறித்த பட்டறை

தொற்றா நோய்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு குறித்த சிறப்பு பட்டறை, யாழ். பாதுகாப்புப் படைத் தவைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மார்ச் 05 ஆம் தகதி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக திரையரங்கில் நடாத்தப்பட்டது.

பிரிகேடியர் ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ, பிரிகேடியர் ஏஎஸ்எம் விஜேவர்தன (ஓய்வு) மற்றும் கெப்டன் எச்எச்டிஐஎல் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் குழு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், நிர்வகித்தல் மற்றும் தடுப்பது குறித்த தலைப்புகளை உள்ளடக்கிய இந்தப் பட்டறையை நடாத்தியது. பங்கேற்பாளர்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுமுறை நடைமுறைகள் மற்றும் மருத்துவ தலையீடுகள் பற்றிய தகவல்களையும் பெற்றனர்.