31st March 2021 15:02:02 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் தெற்கு நிதியுதவியாளரின் உதவியுடன் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் , பாடசாலை சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் , கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் போன்றன பௌர்ணமி தினத்தில் (28) காங்கேசந்துறை திஸ்ஸ ரஜமஹா விஹாரை வளாகத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வேண்டுகோளின் பேரில் மத மற்றும் சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவனத்துடன் இணைந்த செல்வி துஷார தேனுவர, பேராசிரியர் சமிதா மனவடு மற்றும் பேராசிரியர் நிமல் டி சில்வா ஆகியோர் இணைந்து இந்த நன்கொடைகள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் மத அனுஷ்டானங்களின் பின்னர் பௌத்த தத்துவம்' குறித்து தமிழ் மொழியில் பொகவந்தலவே ராகுல தேரர் அவர்கள் பிரசங்கம் செய்ததுடன் ராஜகீய பண்டித வண. தலலே சதகித்தி தேரர் , சில பௌத்த பிக்குகள், 51 ஆவது படைப்பிரிவின் தளபதி, வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். bridgemedia | Sneakers