08th November 2021 11:53:24 Hours
யாழ். குடாநாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் யாழ்ப்பாணம், மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற வருடாந்த தீபாவளி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு கோவிலில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலிலும் பங்கேற்றார். உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மேற்படி மங்களகரமான பூசை நிகழ்வில் ஏராளமான யாழ்ப்பாண பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு மேலும் முக்கியம் சேர்க்கும் வண்ணமாக படையினரின் சமூக சேவை திட்டங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மத முக்கியஸ்தர்கள், மற்றும் 511 பிரிகேட் தளபதி, கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.