Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2020 11:58:33 Hours

யாழ் படையினருக்கு போதைப் பொருள் & பாலியல் தொற்று நோய் தடுப்பு தொடர்பான விரிவுரை

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ‘போதைப் பொருள் தடுப்பு,தவரான நடத்தை மற்றும் பாலியல் தொற்று நோய் தொடர்பான தொடர் விரிவுரையானது, படைத் தலைமையகங்களில் நடைபெற்றன.

இந் நிகழ்வானது 25,26,27 மற்றும் 28 ஆம் திகதிகளில் 51,52 மற்றும் 53 ஆம் பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம்பெற்றன. மேலும் இவ் விரிவுரையானது பாலியல் நோய் சிறப்பு நிபுனர் வைத்தியர் திரு பிரியந்த பட்டகல மற்றும் தேசிய அபாயகர போதைப் பொருள் கட்டுப்பாட்டு சபையின் திரு சாமர பிரதீப் கருணாரத்ன ஆகியோரினால் நடாத்தப்பட்டது.

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் அதிகாரிகள்,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவான படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.url clone | FASHION NEWS