07th March 2023 19:35:45 Hours
‘ஒரு சிந்தனைமிக்க மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளில் பல விரிவுரைகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் 51, 52 மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவுகளில் 2023 மார்ச் 4-6 வரை நடாத்தப்பட்டன.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான இலங்கை கவச வாகன படையணியின் ஓய்வுபெற்ற அதிகாரவணையற்ற அதிகாரியான திரு. டபிள்யூபீ சில்வா அவர்களினால் காலத்திற்கேற்ற முக்கியமான மற்றும் பொருத்தமான விரிவுரைகள் தனித்தனியாக நிகழ்த்தப்பட்டன.
முதல் கட்ட விரிவுரை நிகழ்ச்சி மார்ச் 04 ஆம் திகதி தலைமையக வளாகத்தில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 300 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது. பின்னர், அதே விரிவுரை முறையே 51, 52 மற்றும் 55 வது காலாட் படைபிரிவுகளில் மார்ச் 5-6 வரை நடாத்தப்பட்டது.
அந்தந்தப் படைப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் எனப் பெருந்திரளானோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்களின் கருத்தியல் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.