Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2019 17:14:37 Hours

யாழ் படையினரின் உதவியுடன் 700 வீடுகள் நிர்மானிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் இரண்டு பேருக்கு வீடுகள் இம் மாதம் (17) ஆம் திகதி கையளிக்கப்பட்டன. இது வரைக்கும் யாழ் குடா நாட்டில் இராணுவத்தினரால் 700 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கரவெட்டி மற்றும் பருத்திதுறை பிரதேசங்களில் 55 மற்றும் 551 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 4 ஆவது சிங்கப் படையணி மற்றும் 16 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பூரன கட்டிட நிர்மான பணிகளுடன் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டு முழுமையாக்கப்பட்டது.

இந்த கட்டிட நிர்மான பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் நன்கொடையாளியான திரு குமார் வீரசூரிய அவர்களது நிதி அனுசரனையுடன் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தினரால் 2009 ஆம் ஆண்டிலிருந்து யாழ் குடா நாட்டில் வீடுகள், பாடசாலை உபகரணங்கள் , சிகிச்சை முகாம்கள் போன்ற சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிர்மான பணிகள் அரசு , தனியார் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியாளர்களின் உதவியுடன் இராணுவத்தின் கட்டிட நிர்மான பணிகளுடன் நிர்மானிக்கப்பட்டன. வீடுகள் கையளிப்பு நிகழ்வின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, நன்கொடையாளியான திரு குமார் வீரசூரிய, யாழ் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம், யாழ் இந்திய தூதரகத்தின் பிரதானி திரு எஸ் பாலசந்திரன் 55,51 மற்றும் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike Running