Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th January 2020 16:37:54 Hours

யாழ் படையினரால் யாழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு

எதிர் வரும் தைபொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் வேண்டுகோளின் பேரில் கொழும்பில் உள்ள அமெரிக்கா 'லிமிடெட் பிரேண்ட்ஸ் மாஸ்ட் கேர்ஸ் டீம் அலுவலகத்தின் (தூர கிழக்கு) மாஸ்ட் நிறுவனத்தினரால், யாழ் குடாநாட்டில் பின் தங்கிய குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 110 சைக்கிள்கள் பரிசாக வழங்கும் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இம் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிக சூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்,அவர்களுடன் (தூர கிழக்கு) மாஸ்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வகியான திருமதி டயனா கிராமர் மற்றும் மேலும் பல பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டு இந்த நன்னொடைகளை வழங்கினர்.

மாவிட்டபுரம் பிரதேச ஶ்ரீ கந்தசாமி கோவிலின் பிரதான குருக்கல், (வடக்கு) முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி, 55 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி, நிர்வாக மற்றும் குடியமைப்பின் பிரிகேடியர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை யாழ் (தூர கிழக்கு) மாஸ்ட் நிறுவனத்தினர், சர்வோதயா அதிகாரிகள் - யாழ் கிளை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட இராணுவத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிக சூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். Asics footwear | M2k Tekno