28th December 2019 13:00:02 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள அனைத்து படைப் பிரிவுகளும் இம் மாதம் (25) ஆம் திகதி நத்தார் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ் குடா நாட்டிலுள்ள கத்தோலிக்க பக்தர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் முகமாக தங்களது முழுமையான ஆதரவையும் வழங்கி வைத்துள்ளார்கள்.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 51 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 511, 512, 513 மற்றும் 515 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டு பகுதிகளிலுள்ள ஒட்டாஹபுளம், எராலி தெற்கு, திருநெல்வேலி, நாவற்துறை வடக்கு, செங்கானி கிழக்கு, பரியாவில், சிலாலி, சில்லாலி, அளவெட்டி மேற்கு, வாலாலை மற்றும் மிருசுவில் தேவாலய வளாகங்கள் தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 511 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி சந்தி, யாழ்ப்பாண கோட்டை, பண்ணை ரவுன்டபவுட் சந்தி, தபால் நிலையத்திற்கு முன்னால் நத்தார் மரங்கள் சோடினை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அதேபோல் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் 521, 522 மற்றும் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அச்சுவேலி, சாவகச்சேரி மற்றும் மிருசுவில் பிரதேசங்களிலுள்ள தேவாலய வளாகங்களில் நத்தார் மரங்கள் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு தேவாலய வளாகங்கள் சுத்தம் செய்யும் பணிகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 551, 552 மற்றும் 552 படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பருத்திதுறை, ஐய்யகச்சி, கரவட்டி, கட்கோவலம், முகமாலை, வெற்றிலைகேணி மற்றும் மரதங்கேனி தேவாலய வளாகங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஆனையிறவு இராணுவ நினைவு தூபி, மரதங்கேனி சந்தி, பருத்திதுறை நகரங்கள் நத்தார் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridge media | Air Max