Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2020 15:00:09 Hours

யாழ் படைத் தலைமையகத்தின் 24 ஆவது ஆண்டு நிறைவு

தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கத்தை மேன் மேலும் மேம் படுத்தி கொள்ளும் நிமித்தம், வறுமைகோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவி செய்யும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகமானது தனது 24 ஆவது ஆண்டு நிறைவை இந்த வார ஆரம்பத்தில் கொண்டாடியது.

24 ஆவது ஆண்டு நிறைவின் ஆரம்ப நிகழ்வாக வார ஆரம்பத்தில் அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியில் தொடங்கி, பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீ நாகவிஹாரை, நல்லூர் இந்து கோயில், சார்ச் ஒப் அவர் லேடி ஆஃப் ரிஃப்யூஜ் மற்றும் மொஹிதீன் ஜும்மா பள்ளி ஆகியவற்றில் மத அனுஸ்டானங்களை மேற் கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூரும் வகையில் பலாலி போர் வீரர்கள் நினைவுச் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவதற்காக (19) ஆம் திகதி சிறப்பான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் யாழ் தளபதி யாழ் பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் மா மரக்கன்றையும் நட்டுவைத்தார். latest jordan Sneakers | Nike Shoes, Sneakers & Accessories