Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2023 20:18:58 Hours

யாழ். நோயாளர்களுக்கு 4 வது இராணுவ மருத்துவப் படையினரால் இரத்த தானம்

யாழ். 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 16 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 24 நவம்பர் 2023 அன்று இரத்த தானம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த திட்டம் இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.எ.சீ பெர்னாண்டோ மற்றும் இராணுவ மருத்துவப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியும், யாழ் போதனா வைத்தியசாலையின் மாற்று சிகிச்சைக்கான நிபுணருமான வைத்தியர் (திருமதி) நில்மினி பெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இத் திட்டத்தின் போது யாழ். போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் நலனுக்காக 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் 128 இராணுவத்தினர் இரத்த தானம் வழங்கினர்.

4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.