Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 18:10:02 Hours

யாழ். நாக விகாரையின் “கட்டின” பூஜைக்கு படையினர் உதவி

யாழ். ஸ்ரீ நாக விகாரையில் ஒக்டோபர் 30 - 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வருடாந்த “கட்டின சீவர” பூஜை நிகழ்வுகளுக்கு அவசியமான உதவிகளை விகாராதிபதி வண. மீகாஜந்துரே ஸ்ரீவிமல தேரரின் வழிகாட்டலின் கீழ் படையினர் வழங்கினர்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் அறிவுரைக்கமைய 51 வது படைப்பிரிவு சிப்பாய்களால் வருடாந்த நிகழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே இடம்பெறுகின்ற கட்டின பூஜை நிகழ்வின் சாத்தியப்பாட்டிற்கான நிதி உதவிகளை நன்கொடையாளர்கள் வழங்கியிருந்ததோடு யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களால் “கட்டின சீவரய” ஊர்வலமான எடுத்துவரத்பட்டதை தொடர்ந்து வழிபாடுகள் ஆரம்பமாகின.

இதன்போது 512 வது பிரிகேட் தலைமையகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட 'கட்டின சீவர பூஜைக்கு வழங்கப்பட்டது‘(சமய மரபுகளுக்கமைய புதிய ஆடைகளை வழங்குதல்), சமய நிகழ்வுகள், பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு, (காலை மற்றும் மதியம்) அட்டப்பிரிகர வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவம்சத்தை எட்டியது.

மத குருமார்கள், அரசாங்க அதிகாரிகள், 51 மற்றும் 52 பிரிவுகளின் தளபதிகள், 511 மற்றும் 512 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.