29th October 2017 13:51:40 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியவர்களின் ஆலோசனைக்கிணங்க பொலிஸ் மற்றும் மாநகர சபையிரின் ஒத்துழைப்போடு வருடாந்த கடின பிங்கம எனும் பௌத்த மத பூஜைகள் யாழ் நாக விகாரையில் அதிக மழையின் காரணமாக ஒக்டோபர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் இவ் விகாராதிபதியான மீகஹாகந்தே சிரினிமலதேரரின் தலைமையில் இடம் பெற்றது.
அத்துடன் 28ஆம் திகதியன்று யாழ் பாடசாலைச் சிறார்களின் அழகிய நடனத்துடன் பெரஹரா இடம் பெற்றதுடன் முப்படையினர் மற்றும் பொலிசார் கலந்து கொண்டு தமது ஒத்துழைப்பை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து 512ஆவது பாதுகாப்பு படைப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட பெரஹரா நிகழ்வுகள் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்தில் நிறைவுற்றது.
மேலும் 29ஆம் திகதி இன்று இவ் விகாரையில் பிரித் வழிபாடுகள் இடம் பெறவுள்ளதுடன்,பௌத்த தேரர்களுக்கான ஹீல் தானையும் (அன்னதானம்) வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியவர்கள் மற்றும்படையினரால் அட்டபிரிகர போன்றவை வழங்கப்பட்டதுடன் மதத் தலைவர்கள், அராசங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் இப் பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டனர்.
latest Running Sneakers | Men’s shoes