Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2022 12:41:01 Hours

யாழ். தளபதி படைப்பிரிவுகளுக்கு அறிமுக விஜயம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட அவர்கள் டிசம்பர் 28-30 ம் திகதிகளில் 51, 52 மற்றும் 55 வது காலாட் படைபிரிவுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

அவர் முதலில் 51 வது காலாட் படைபிரிவிக்கும் பின்னர் 52 வது காலாட் படை பிரிவு மற்றும் 55 வது காலாட் படைபிரிவு தலைமையகங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டார் அவருக்கு வரவேற்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து கோப்பாயில் 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மிருசுவில் 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ, கடைக்காடு 55 வது காலாட் படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

வழக்கமான நிகழ்வாக படையினருக்கு உரையாற்றல் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் குழுபுகைப்படம் எடுத்தல் போன்றன இடம் பெற்றன.

விஜயத்தின்போது அவர் தனது பொறுப்பில் உள்ள பிரிகேட்கள், கட்டளைப் படையலகள் மற்றும் படையலகு பயிற்சிப் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி , பிரிகேடியர் நிர்வாகம், மற்றும் வழங்கல், பிரிகேட் தளபதிகள், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி மற்றும் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.