12th April 2021 21:25:53 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களினால் யாழ். சல்லிப்புரம் பகுதியில் வசிக்கும் திரு. காண்டீபன் கோவிந்தசாமி என்பவரின் வறுமை நிலையை கண்டு அவருக்கான புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுப்பதற்காக புதன்கிழமை (07) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
513 வது பிரிகேடினர் ஏற்பாடு செய்த அடிக்கல் நாட்டும் விழாவின் போது, மத அனுட்டானங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் தளபதியால் கல் நாட்டி வைக்கப்பட்டது.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வசிக்கும் திரு தபோதரன் விஸ்வநாதன் என்பவரினால் இந்த வீடு நிர்மாணத்திற்கான அனுசரணை வழங்கப்பட்டது.
அத்தோடு வீட்டின் நிர்மாணப் பணிகள் 16 வது கெமுனு ஹேவா படையின் மேற்பார்வையின் கீழ் 513 வது பிரிகேட் சிப்பாய்களால் நிர்மாணிக்கப்பட்டதுடன், நிர்மாண பணிகளுக்கான தொழில்ட்ப உதவிகளும் படையினரால் வழங்கப்பட்டன.
அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பின்னர் யாழ். பாதுகாப்பு படைத் தளபதியால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் அங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
51 வது படைப்பிரின் படைத் தளபதி , 513 வது பிரிகேடின் தளபதி , சிரேஸ்ட அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் யாழ். பாதுகாப்பு படையின் சிப்பாய்களும் இந்த விழாவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.jordan release date | Sneakers Nike Shoes