Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2019 14:27:22 Hours

யாழ் குடா நாட்டில் ‘துரு சிரச’ எனும் திட்டத்தின் கீழ் மர நடுகை

யாழ் குடா நாட்டில் மழைக்காடுகளின் அடர்த்தியை அதிகரித்து பசுமையாக்கும் நிமித்தம் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட ‘துருலிய வெனுவென் அபி’ மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வனரோப திட்டத்தின் கீழ் பெரிய மர நடுகையானது சிரச ஊடக வலையமைப்பின் ‘துரு சிரச’ எனும் திட்டத்தின் உதவியுடன் யாழ் மரதங்கேனி பிரதேசத்தில் 2019 நவம்பர் மாதம் 04 ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்ததுடன், சிரச ஊடக வலையமைப்பின் மின்னணு ஊடக குழு பணிப்பாளர் திருமதி நீத்ரா வீரசிங்க, மக்கள் பொது தொடர்பு பணிப்பாளர் திரு பியந்த விஜேசிங்க, யாழ் ஆசிரியர் மாணவர்கள், மற்றும் மருதங்கேணி பொது மக்கள், புவியியல், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பணிப்பாளர்களின் ஆலோசனையின்படி, 2019 நவம்பர் மாதம் 04 ஆம் திகதி 5000 க்கும் அதிகமான மூலிகை மற்றும் உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக, இராணுவத் தளபதி அவர்களின் தலைமையிலான அதே ஊடக வலையமைப்பின் ஆதரவுடன் அதே திட்டத்தின் கீழ் அனுராதபுரத்தில் உள்ள சாலியபுர பிரதேசத்தில் 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த மர நடுகை திட்டத்தில் நன்கொடையாளர்களால் மார்கோசா, மா, முந்திரி, டெர்மினலியா கட்டப்பா, புளி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை யாழ் குடா நாட்டின் உள்ள பொதுமக்களின் சமூக, மத மற்றும் கலாச்சார சூழலுடன் மிகவும் தொடர்புடையவையாகவும் கருதப்படுகின்றன. அதன்படி படையினரால் முந்தைய திட்டத்தில் மேற்கொண்டதை போல் 7-8 அடி உயரம் வளரும் வரை அவற்றை நீர் ஊற்றி வளர்க்கும் வரை பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில் மத தலைவர்கள், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், முதியோர், சமூக தலைவர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் சிரச சிரச ஊடக வலையமைப்பின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். Running Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ