Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2021 16:00:36 Hours

யாழ்ப்பாண நோயாளிகளின் உயிர் காக்க யாழ் படையினர் இரத்த தானம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் விடுத்த வேண்டு கோளிற்கு அமைவாக சத்திர சிகிச்சை மற்றும் குறிப்பாக கொவிட் தொற்றுநோய் காரணமாக யாழ் போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் வெள்ளிக்கிழமை (20) யாழ்ப்பாண வைத்தியச்சாலை நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இரத்த தானம் செய்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் 4 வது இலங்கை இராணுவ வைத்திய படையணியினால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிவாக்கு அவர்களின் வழிகாட்டுதலின் படி அதிகாரிகள் உட்பட மொத்தம் 100 படையினர் இரத்த தானம் செய்தனர்.

51 வதுடைப்பிரிவு தளபதி, வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம், பிரிகேட் தளபதிகள், யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக சிரேஸ்ட பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.

இத்தகைய வைத்தியசாலை கோரிக்கைகளுக்கு யாழ்ப்பாணப் படையினர் வழக்கமாகப் பதிலளிப்பதுடன், உயிர்களைக் காப்பாற்ற இரத்த வங்கிக்கு இரத்தம் கொடுக்கும் நடைமுறையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.